மஹரகமவில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமியை பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லங்காதீப நாளிதழ் தெரிவித்துள்ளது .
சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மஹரகமவில் உள்ள பிரபல பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள் எனவும், கடந்த வருடத்தில் காதல் வயப்பட்டவர்கள் எனவும் மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் பாடசாலை அல்லது டியூஷன் வகுப்புக்கு செல்லும் வழியில் ஒன்றாக நேரத்தை செலவிட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சிறுமி, வீட்டில் தனியாக இருந்த நிலையில், சிறுவனை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளதாகவும், அதன் போது அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (யாழ் நியூஸ்)