சாய்ந்தமருதில் எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு, பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஆதில் ஹசன் உட்பட உலமாக்கள் கலந்து கொள்ளும் விசேட பயான் நிகழ்வு இன்று (23) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில், அல்-குர்ஆன், ஸுன்னா வழிகாட்டலில் ஓர் இஸ்லாமிய குடும்பம் எனும் தலைப்பில் பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஆதில் ஹஸன் கலந்து கொண்டு விசேட உரையாற்றுவதோடு, இன்றைய நவீன உலகில் இளைஞர்கள் எதிர் நோக்கும் சவால்கள் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.என்.எம். கிஸ்லி (தெளஹீதி), றமழானை அமல்களைக் கொண்டு அலங்கரிப்போம் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எம். அஹ்ஸன் (ஸஹ்வி), ஆகியோரும் இதன்போது உரை நிகழ்த்தவுள்ளனர்.
பெண்களுக்கான தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் கலந்து பயனடையுமாறு ஏற்பாட்டு குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.