புதிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்; முதலாவது நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்; முதலாவது நபர் கைது!


சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.


பாணந்துறை பிரதேச சமூக பொலிஸ் குழு உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர், குறிப்பிட்ட நபரிம் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 400,000 ரூபாய் இருந்தது என்றார்.


சந்தேக நபர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் தீங்கிழைக்கும் வகையில் அவதூறு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


அவர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இணையத்தில் ​அரசியல்வாதிகளை அவதூறாகப் பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தனக்கு பணம் கொடுத்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலர்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்காக கோட்டைக்குச் சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சமூக ஊடகங்கள் எங்களை, அரசாங்கத்தின் செயல், பதில் ​பொலிஸ்மா அதிபர் அனைவரையும் அவதூறாகப் பேசுகின்றார்' என்று அவர் கூறினார்.


இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை (நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்) அரசாங்கம் கொண்டு வந்ததாக அமைச்சர் கூறினார்.


அரசாங்கத்தை கவிழ்க்க கூட அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சமூக ஊடகங்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மாத்திரமே இணைய பாதுகாப்பு சட்டம் பிரச்சினையாக இருக்கும் என அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.