நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது?


ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு பிரதான தேர்தல்களில் ஒன்றை இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் நடத்த அரசாங்கம் நிச்சயமாக தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


நீண்ட இராஜதந்திர சேவைக்குப் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறும் இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டனைச் சந்தித்த போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


"இது தேர்தல் ஆண்டு; 2024 இன்னும் பன்னிரெண்டு மாதங்கள் கூட இல்லை என்று எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தினேன்.


இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைவதைக் கருத்தில் கொண்டு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நியூசிலாந்து உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.