ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க விடுவித்து விடுதலை செய்யப்பட்டுளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணையின் பிரகாரம் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்துக்கு இதனை எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையின் பிரதிகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.