மறைந்த நிஷாந்தவின் பதவி வெற்றிடத்தை நிரப்ப விரும்பும் மனைவி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மறைந்த நிஷாந்தவின் பதவி வெற்றிடத்தை நிரப்ப விரும்பும் மனைவி!


புத்தளம் மாவட்ட மக்களோ அல்லது கட்சியோ கேட்டால் மாத்திரமே தனது கணவரின் வெற்றிடத்தை பரிசீலிக்க தான தயாராக இருப்பதாக மறைந்த முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா தெரிவித்துள்ளார்.


அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்  அனுராதா ஜயக்கொடியின் இல்லத்திற்குச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


"எனது கணவர் புத்தளம் மாவட்டத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அளப்பரிய சேவை செய்துள்ளார். அவரிடம் உதவி கேட்ட எவரும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்பப்படவில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. எனது கணவர் இறப்பதற்கு முன்பே சில ஊடகங்கள் நான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தன. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது யாரும் என்னிடம் கேட்கவில்லை.அரசியலுக்கு வருகிறேன் என்று இதுவரை எந்த ஊடகத்திலும் அறிக்கை விடவில்லை. கூறினார்.


"எனது கணவரின் அரசியல் விவகாரங்களில் பாதியை நான் நிர்வகித்தாலும், அவரின் தனிப்பட்ட செயலாளராக செயற்பட்டாலும், அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இன்னும் அந்த நம்பிக்கை இல்லை. ஆனால் புத்தளம் மக்கள், நாட்டு மக்கள் மற்றும் அவர் விட்டுச் சென்ற பதவியை ஏற்று மக்கள் பணியைத் தொடருமாறு கட்சித் தலைமை என்னைக் கேட்டுக் கொண்டது, நான் அதைப் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கலாம்" என்று அவர் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.