மாணவிகள் இருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாப பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவிகள் இருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி பரிதாப பலி!


களுத்துறை - களுகங்கையில் நீராடச்சென்ற மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.


15 மற்றும் 16 வயதுகளையுடைய இரண்டு மாணவிகளும் 17 வயதுடைய மாணவரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


களுத்துறை பன்வில மற்றும் தொடங்கொடை பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரின் தாயாரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற மாணவர்களே இவ்வாறு நீராடச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.


சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.