பாடசாலை குழந்தைகளுக்கான உபகரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை குழந்தைகளுக்கான உபகரணங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், பிளாஸ்டிக் மதிய உணவு பெட்டிகள், பென்சில்கள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அவற்றில் பெரும்பாலானவை தரமற்றவை என சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாக வைத்தியர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நாட்களில், அடுத்த ஆண்டு தொடங்கும் புதிய பாடசாலை தவணைக்கான  பாடசாலை உபகரணங்களை வாங்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் பெரும்பாலானவர்கள் குறைந்த விலையில் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்றைய காலத்தில் சந்தையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான பாடசாலை உபகரணங்களின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

கட்டுப்பாட்டு திணைக்களத்தின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் மஹிந்த விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

தரமற்ற பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்கள், பென்சில்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை நீண்டகாலமாக பயன்படுத்துவதால் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்கிறார்.

டொக்டர் மஹிந்த விக்கிரமாராச்சி - பிரதம வைத்திய அதிகாரி - நிலைமைக் கட்டுப்பாட்டுப் பிரிவு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொழும்பு தேசிய பிரச்சாரமும் இது தொடர்பான உண்மைகளை சுட்டிக்காட்டுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் கல்வி அதிகாரிகளின் கவனம் விரைவில் செலுத்தப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இவ்வாறான தரமற்ற பாடசாலை உபகரணங்கள் சந்தைக்கு வந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தரப்படுத்தப்பட்ட பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.