பண்டிகைக் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உறுதி செய்ய வேண்டுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிபெட்கோ, லங்கா ஐஓசி, சினோபெக் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருள் இருப்பை பேணுவதற்கு செயற்பட வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.