சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்த சம்பவம்; கைது செய்யப்பட்டவர் வழங்கிய வாக்குமூலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாய்ந்தமருது மத்ரஸா மாணவன் உயிரிழந்த சம்பவம்; கைது செய்யப்பட்டவர் வழங்கிய வாக்குமூலம்!


அண்மையில் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) இரவு மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது 13) எனும் கல்வி கற்று வந்த  மாணவன் தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டார்.


இதனை அடுத்து மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.


மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிகமாக கைது செய்யப்பட்ட நால்வரின் ஒருவரின் வாக்குமூலத்துக்கு அமைய,


மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து "அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா?" என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிடிவி தொழிநுட்பவியலாளர் ​ஒருவர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும், "சம்பவ தினமன்று இரவு 7.00 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிடிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து  சிசிடிவி காணொளிகள் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் ஏன் அவற்றை அழிக்க வேண்டும்? என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை. 


பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். பின்னர் இரவு 11.00 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அந்தவேளை எனது சகோதரர் நாங்கள் சிசிடிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் கூறினார்.


நான் அவரிடம் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன். அப்பாடசாலையில் சிசிடிவி காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன், அதனை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறினார். அத்துடன் 1000 ரூபாய் காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.


அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில் மௌலவி அடிக்கடி தொலைபேசி எடுத்து அழித்த சிசிடிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார்." என தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.