பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்! காரணம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்! காரணம் இதுதான்!


தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலை தனது 71 ஆவது வயதில் காலமானார்.


விஜயகாந்த் மறைவினை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த், அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்தார். எம்.எல்.ஏ.வாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருக்கு அடுத்தடுத்த சறுக்கல்கள் ஏற்பட்டது.


உடல்நிலை பாதிக்கப்படவே வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கி அறிக்கை வாயிலாக மட்டுமே அரசியல் செய்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற விஜயகாந்த் அதில் இருந்து மீண்டார். அவ்வப்போது கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்தித்து வருகிறார் விஜயகாந்த். கடந்த மாதம் 18ஆம் திகதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் வைத்தியசாலையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.


முதலில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு சென்றுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு சளி, இருமல் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்  வைத்தியசாலையில்  2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற விஜயகாந்த் பூரண குரணமடைந்தார்.


கடந்த டிசெம்பர் 11ஆம் திகதி அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். இதனையடுத்து கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவரது உடல்நிலையை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டனர்.


இந்நிலையில் தான் செவ்வாய்கிழமை இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் லைவத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 15 நாட்களுக்கு பிறகு வழக்கமான பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில்  திராவிட கழகம்  திராவிட கழகம் (தேமுதிக) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் அதிகரிக்கவே அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்திருந்தது. விஜயகாந்த் மறைவு செய்தி அவரது தொண்டர்களையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


விஜயகாந்தின் உடன் மியாட் வைத்தியசாலையில் இருந்து அவரது வீட்டிற்கு நோயாளர் காவு வண்டி  மூலம் கொண்டு வரப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.