6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!


6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.


425 கிராம் உள்ளுர் டின் மீனின் விலை 55 ரூபாவினாலும், உருளைக்கிழங்கு மற்றும் சிவப்பு  அரிசியின் விலை தலா 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிவப்பு பருப்பு , வெள்ளைநாடு மற்றும் வெள்ளை அரிசி ஆகியவற்றின் விலைகள் தலா 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.  


இதன்படி, 425 கிராம் உள்ளுர் டின் மீனின் விலை 475 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு கிலோ கிராம் ஒன்றின் புதிய விலை 280 ரூபாவாகவும், சிவப்பு  அரிசி ஒரு கிலோவின் புதிய விலை 175 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோ கிராம் ஒன்றின் புதிய விலையாகும். 309 ரூபாவாகவும், வெள்ளை நாடு கிலோ கிராம் ஒன்றின் புதிய விலை ரூபாய் 206 எனவும், ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசியின் புதிய விலை 199 ரூபாய் எனவும் சதொச மேலும் குறிப்பிடுகின்றது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.