சட்டவிரோத பிரமிட் திட்ட பரிவர்த்தனைகளுக்காக இலங்கை மத்திய வங்கியினால் தடை செய்யப்பட்ட Onmax DT தனியார் நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களை நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளில் மார்ச் 21ஆம் திகதி வரை ரூ. 79 கோடிக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டதாக நிதி மற்றும் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்ததனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.