ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்திற்கான வரவு செலவுத் திட்டம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இந்த வருட வரவு செலவு திட்டத்தில் கடுமையான நிதி ஒழுக்கம் காணப்படுவதாகவும், இந்த நிதி ஒழுக்கம் ஒரு நாட்டிற்கு அவசியமானது எனவும் தெரிவித்தார்.
இன்று வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாகவும், இந்த நெருக்கடியில் நாட்டு மக்கள் அவதிப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, இந்த நிலைமைக்கு ஏதாவது தீர்வை வழங்கும் திட்டம் அரசாங்கத்திடம் இருப்பதையே வரவு செலவுத் திட்ட உரை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.