வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெடிப்புச் சம்பவத்தில் நால்வர் காயம்!


முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும் வீதியில் கன்னிவெடி அகற்றும் பிரிவினர் கன்னிவெடிகள் அகற்றும் பணிக்காக இன்று (20) காலை சென்றிருந்தனர். 


இதன்போது தமது பணிக்கு தேவையான மின்கலம் பெரும் வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறியது.


இதன்போது, கன்னிவெடி அகற்றும் பணிக்காக வந்திருந்த ஊழியர் நால்வர் சிறு காயங்களுக்கு உள்ளாகி அசிற் உடலில் பட்டிருந்ததாலும் பரிசோதனை மேற்கொண்டு உடல்நிலையை பார்ப்பதற்காக உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான சிகிச்சையளித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


குறித்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.