புத்தளம் பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது கற்பிட்டியிலிருந்து பாலாவி நோக்கிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின் நுரைச்சோலை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் பாலக்குடா பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய அரோன் என்ற 5 வயதுடைய சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.