அரசாங்க பணத்தில் உறவினர் ஒருவருக்கு விமர்சையாக திருமணம் நடத்திய பெண் ஊழியர் பணி நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்க பணத்தில் உறவினர் ஒருவருக்கு விமர்சையாக திருமணம் நடத்திய பெண் ஊழியர் பணி நீக்கம்!


தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கண்டி மாநர சபையின் நிதி திணைக்களத்தில் பணியாற்றும் பெண்ணொருவரே இவ்வாறு நாளாந்த வருமான 51 இலட்சம் ரூபாயை நகர சபையின் கணக்கில் வைப்பிலிடாது, தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவரின் திருமண உற்சவத்துக்கு பயன்படுத்தியுள்ளார்.


அதனையடுத்தே நிதி திணைக்களத்தின் ஒரு பிரிவின் பிரதான முகாமைத்துவ சேவையில் கடமையாற்றும் பெண் அதிகாரியே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கண்டி மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த பணியாளரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கான பரிந்துரையை மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத்துக்கு அனுப்பினார். அதன்பின்னர் மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமவன்சவுக்கு அனுப்பி வைத்தார்.


கண்டி மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்களை கருத்திற்கொண்டு மாநகர சபையின் கணக்குப் பிரிவில் செலுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக மாநகரசபை கணக்கில் வரவு வைப்பதற்காக மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் இஷான் விஜேதிலக்க தெரிவித்தார்.  


இதன்படி, நகர மக்கள் மாநகர சபைக்கு செலுத்தும் வரி, குடிநீர் கட்டணம் போன்ற அனைத்து கொடுப்பனவுகளும் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தினசரி அடிப்படையில் நகராட்சி கணக்குகள் துறையினால் பெறப்படும் பணத்தை குறைக்கும் வகையில் பணி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.