சவுதி அரேபியாவை சேர்ந்த தனவந்தரான ஒமர் ஸாலி அப்துல் அஸீஸ் பின் பாபக்கர் அவர்களால் தெஹிவளை கல்விகார பிலேஸில் பள்ளிவாசலுக்காக வாங்கப்பட்ட சுமார் 50 கோடிகள் பெருமதி வாய்ந்த 80 பைசஸ் காணியை சில உலமாக்கள் அபகரிக்க முற்படுவது சம்பந்தமான உண்மைகள் அண்மையில் ஆதாரத்துடன் வெளிக் கொண்டுவரப்பட்டது.
இதைத் தொடர்ந்து சில சலசலப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு உண்மை வெளிவந்ததின் பிரதிபலனாக உறங்கிக் கொண்டிருந்தவர்கள் சிலர் திடுக்கிட்டு எழுந்துள்ளனர். அவர்களின் அதிர்வுகள் சில கோணங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதன் வெளிபாடாக இப்பள்ளிவாசளின் பாபக்கர் மஸ்ஜித் என்ற பெயர் பலகை கிழித்தெரியப்பட்டுள்ளது.
ஊர்மக்களால் இது சம்பந்தமான முறைப்பாடு ஒன்றும் தெஹிவளை பொலீஸ் நிலையத்தில் 15.09.2023 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் பள்ளிவாசலின் மின்சாரம் இடைநிறுத்தப்பட்டு திட்டமிட்டு இந் நாசகார வேலை அரங்கேற்றப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டில் ஒரு சான் நிலம் பள்ளிவாசலுக்காக வாங்க முடியாத நிலையில், அதிலும் கொழும்பு மாவட்டத்தின் அதி விலையுயர்ந்த, தெஹிளைப் பகுதியில், அதிலும் தாராள மனதுடன் 80 பச்சஸ் கனிகளை வாங்கி மக்களின் தொழுகைக்காக அன்பளிப்புச் செய்தவரின் பெயர் நாமம் கிழித்தெரியப்பட்டது என்பது, மிகவும் மன வருத்தத்திற்கு உரிய செயலும், நன்றி கெட்ட, மிக மிகக் கேவலமான ஒரு செயலாகும் என மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
எனவே கௌரவப்படுத்தப்பட்டு உயர்ந்த நிலையில் மதிக்கப்பட வேண்டிய நல் உள்ளம் படைத்த ஒரு மனிதரின் பொயர் நாமம், இவ்வாறு அசிங்கப்படுத்துதின் மூலம் இதை வாங்கி சமூகத்திற்கு அன்பளிப்பு செய்த தனவந்தரின் கன்னத்தில் அறைகின்றதா இந்த உலாமா சமூகம்?
பேருவளை ஹில்மி