இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானா பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவனொருவன் சக மாணவர்களுக்கு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், இதனை அவதானித்த பாடசாலை ஆசிரியர் மாணவனை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பாடசாலையில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு கசிப்பு விற்பனை செய்துள்ளார்.
குறித்த மாணவன் தண்ணீர் போத்தலில் கசிப்பை கொண்டு சென்று உயர்தர மாணவர்களக்கு கோப்பைகளில் ஊற்றி விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸார் மாணவனை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்கள்.