எதிர்க்கட்சி என்ற ரீதியில் எதிர்ப்போம்; ஆனால் நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! -கம்மன்பில

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்க்கட்சி என்ற ரீதியில் எதிர்ப்போம்; ஆனால் நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! -கம்மன்பில

அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக சர்வதேச மட்டத்தில் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுறு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் கடுமையாக எதிர்ப்போம். ஆனால் சர்வதேச மட்டத்தில் நாட்டை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் தற்போது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.


பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளினால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்படும் நிலையில் சிங்கள அரச தலைவரை ஆட்சிக்கு கொண்டு வர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சேனல் 4 குறிப்பிடுகிறது.


புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகளுடன் சலே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் காலத்தில் தான் நாட்டில் இருக்கவில்லை என சுரேஷ் சலே குறிப்பிடுகிறார். ஆகவே சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்துக்கும், சுரேஷ் சலே குறிப்பிடும் விடயம் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை முதலில் முன்னெடுக்க வேண்டும்.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி காலத்துக்கு காலம் மாற்றமடைகிறார். ஆரம்பத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இரண்டாவது அமெரிக்கா, மூன்றாவதாக மைத்திரிபால சிறிசேன, நான்காவதாக கோட்டபய ராஜபக்ஷ என முக்கிய சூத்திரதாரிகள் இவர்கள் தான் என்று பெயர் குறிப்பிடப்பட்டது. தற்போது புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படுகிறது.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அதனை பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அதை விடுத்து ஊடகங்களிடம் குறிப்பிடுவது பயனற்றது. அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக நாட்டுக்கு எதிராக செயற்படமாட்டோம் என்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.