கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது ஒன்று என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.
இலங்கையில் மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தானே முன்னின்று செயற்பட்டதாக கூறிய அவர் அதற்காக தான் பெருமை அடைவதாகவும் கூறினார்.
இன்று பலரும் தாங்கள் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை செய்ததாக கூற முற்படுவதாகவும் அவர் கூறினார்.
எனது குழந்தைக்கு பல தந்தைகள் உள்ளனர் ஆனால் குழந்தையின் தாய் நான் மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் வாரம் மருத்துவத்த தேவைக்காக ஏற்றுமதி செய்வதற்கு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர் அது இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள் என அவர் கூறினார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.