சேனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தை விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சேனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தை விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்?


1990 ஆம் ஆண்டு சென்னையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) உறுப்பினர்களில் சேனல் 4 ஆவணப்படத்தில் தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானாவின் தந்தையும் ஒருவர் என நன்கு தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


சென்னையில் கொல்லப்பட்ட EPRLF உறுப்பினர்களில் முகமட் மிஹ்லர் முகமட் ஹன்சீரும் ஒருவர் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.


1999 ம்ஆண்டு ஜூன்19 ம்திகதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தொடர்மாடியில் உள்ள வீடொன்றில் EPRLFவின் கூட்டம் நடந்துகொண்டிருந்த வேளை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அவரது தந்தை கொல்லபபடும்போது ஹன்சீருக்கு 8 வயது என ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது.


இணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாணசபையை EPRLF ஆட்சி செய்த வேளை முகமட் மிஹ்லரிற்கு EPRLF அமைப்புடன் தொடர்பிருந்ததை விடயமறிந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன என ஐலண்ட்  தெரிவித்துள்ளது.


ஆசாத் மௌலானாவிற்கு சிவனேசதுரை சந்திரகாந்தனுடன் உள்ள தொடர்பை இந்தியாவில் பயிற்றுவிக்கப்பட்டு இலங்கையில் செயற்பட்ட தமிழ் குழுக்களின் பின்னணியை அடிப்படையாக வைத்தே ஆராய வேண்டும் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் 1990 இல் இந்திய அமைதிப்படையினர் விலகியதை தொடர்ந்து புதுடில்லியின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட வரதராஜ பெருமாள் அரசாங்கத்தின் நிர்வாகம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து EPRLF அமைப்பினது தலைவர்களும் உறுப்பினர்களும் பெருமளவில் இந்தியாவில் தஞ்சமடைந்ததையும் விடயமறிந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.


இது குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என முன்னாள் தூதுவரும் சேனல் 4 இல் கருத்து தெரிவித்தவருமான சரத் கொங்காக தெரிவித்துள்ளார்.


இலங்கையின் பயங்கரமான கடந்த காலங்களில் இருந்து எங்களால் மீளமுடியாமல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


-வீரகேசரி


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.