கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இன்று (25) அதிகாலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் பயணித்தவர்களாவர்.
மேலும், இந்த விபத்தால் அந்த குறித்த வீதியில் அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.