தனது வகுப்பாசிரியரால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 19 வயது மாணவியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தையடுத்து மாணவி சில மருந்து வில்லைகளை உட்கொண்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியம்பலாவ பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி தரம் 13 இல் கல்வி கற்பவர் எனவும் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் குளியாப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தான் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் திகதி தனது ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குறித்த மாணவியிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டையடத்து தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.