சாரதிகள் இழைக்கும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த செயலி ஊடாக சாரதிகள் இழைக்கும் தவறுகளை பயணிகளால் நேரடியாக தெரிவிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் இழைக்கும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதிகளுக்கு குறைபாடு பரிசோதனை புத்தகமொன்றை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் சாரதிகளால் இழைக்கப்படும் தவறுகளை பரிசோதகர்களால் அறிந்துக்கொள்ள முடியும்.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 218 பேருந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதனால், 19 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து தொடர்பான விசாரணை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.