
சில மாதங்களுக்கு முன்னர் கண்டி நகரில் குறிப்பிட்ட சாரதியின் வாகனத்தை கைப்பற்றிய சிலர் சாரதியை தாக்கி வாகனத்தை எடுத்துச் சென்றதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கட்டணத்தை செலுத்தாத வாகனங்கள் இருப்பின் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவிக்குமாறு குத்தகை நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேசத்தின் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு அறிவித்ததன் பின்னர், பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்படவுள்ளதாகவும், உரிய நடவடிக்கையின் போது ஏதேனும் அமைதி மீறல் ஏற்பட்டால், அமைதியைப் பேணுவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு வழங்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.