மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாடு பூராகவும் தங்குதடையற்ற மின்சாரத்தை வழங்குவதாக இலங்கை மின்சார சபை உறுதியளிப்பதாவும், நேர அட்டவணைப்படி மின்துண்டிப்பை மேற்கொள்ளும் திட்டமில்லையெனவும் தெரிவித்தார்.
24 மணிநேரமும் தடையின்றி மின்சாரத்தை வழங்கத் தேவையான கூடுதல் மின்சார சக்தியை இலங்கை மின்சார சபை கொள்வனவு செய்யும் என அவர் மேலும் தெரிவித்தார்.