வாய்மூல கேள்விகளுக்கான நேரத்தை ஒதுக்குவது தொடர்பில் ஏற்பட்ட அமளியை அடுத்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார ஜயமஹ மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகிய இருவரும் இன்றைய (23) பாராளுமன்ற அமர்விலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவை நெருங்கி அவரிடம் அமைதியற்ற முறையில் நடந்து கொண்டமையால், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் இடைநிறுத்தம் செய்தார்.
இதனையடுத்து சபை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.