நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருபவர்கள் பிரதான வாயிலின் பாதுகாப்புச் சாவடிக்கு அருகில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அங்கு சந்தேக நபரின் சூட்கேஸில் இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சந்தேக நபர் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.