தாமரை கோபுர சொத்துக்களை சேதம் செய்த குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஆணொருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாமரை கோபுர சொத்துக்களை சேதம் செய்த குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஆணொருவர் கைது!


நேற்று (09) கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூறப்படும் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வீடியோ காட்சிகளின்படி , பெண்கள் வெளிப்புற கண்காணிப்பு தளத்தின் விளிம்பில் எழுதுவதைக் காணலாம்.


கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து மருதானை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை அமுல்படுத்தப்படும் என கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தினால் பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், அண்மைக்காலமாக அழிவுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.