இலங்கைக்கு கண் வில்லைகளை இறக்குமதி செய்ததில் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமாக முறைகேடு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கணக்காய்வு திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் நிதி முறைக்கேடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ அண்மையில் இது தொடர்பில் வெளிப்படுத்தி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.