IMF உடன் உடன்பட்ட எட்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்ற தவறிய இலங்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

IMF உடன் உடன்பட்ட எட்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்ற தவறிய இலங்கை!


சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்பட்ட வேலைத்திட்டங்களில் இலங்கையானது ஜூன் மாத இறுதியளவில் 08 வேலைத்திட்டங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் 33 வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.


இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் எவ்வாறு வினைத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் “வெரிட்டே“ நிறுவனத்தின் மூலம் IMF Tracker’ என்ற நிகழ்நிலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.


(Unknown எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வேலைத்திட்டங்கள் குறித்த சரியான தரவுகள் வெளியிடப்படாதவையாகும்.)


2023 மே மாதத்தில் 04 ஆகவிருந்த தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் முழுமைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களின் எண்ணிக்கையானது 2023 ஜூன் மாதத்தில் 08 ஆக உயர்வடைந்துள்ளதாக வெரிட்டேவின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.


அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக அமைச்சரவை ஒப்புதலைப் பெறுதல், ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை இயற்றுதல், அரசுக்கு சொந்தமான 52 முக்கிய நிறுவனங்களின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு திட்டமிடல் போன்றவையும் இவற்றில் உள்ளடங்கும்.


மேலதிக முழுமையான தகவல்களைப் பெற https://manthri.lk/ta/imf_tracker என்ற வலைத்தளத்தை அணுகவும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.