அகில இலங்கை ரீதியில் வரலாற்று சாதனை படைத்த ருகையா கமால்தீன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அகில இலங்கை ரீதியில் வரலாற்று சாதனை படைத்த ருகையா கமால்தீன்!

 

நேற்று (17) கொழும்பு Shangri-La Hotel இல் இடம் பெற்ற அகில இலங்கை ரீதியான புனித அல்-குர்ஆன் மணணப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் குருநாகல் - பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த கமால்தீன் மற்றும் ரிம்ஸினா அவர்களின் அன்பு புதல்வி ருகையா கமால்தீன் அவர்கள் 12-15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான அல்-குர்ஆன் மனனப் பிரிவில் முதலாமிடம் பெற்று எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

எமது பிரதேசத்தில் முதன் முதலாக அல்குர்ஆன் மணணப் பிரிவு போட்டியில் மிகவும் இளவயதில் பல நூற்றுக் கணக்கான மாணவிகளோடு போட்டியிட்டு அகில இலங்கை ரீதியாக முதலாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

முதலாம் இடம் பிடித்ததற்காக போட்டி ஏற்பாட்டு குழுவினரால் சுமார் 248,000 /= பெறுமதியான பணப் பரிசு வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியின் இந்த இளம் வயது சாதனை எமது பொத்துஹெர பிரதேச வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய நிகழ்வாகும்.

குறித்த மாணவி தனது சிறு பராயம் தொடக்கம் அல் குர்ஆணை முழுமையாக மனனம் செய்து அல் ஹாபிழாவாக வர வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் தரம் 1-5 வரை மெத்தேகெடிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று பின்னர் மார்கக் கல்விக்காக புத்தளம் மன்பஉஸ் ஸாலிஹாத் பெண்கள் கல்லுரியில் அல்-குர்ஆன் மணணப் பிரிவில் கல்வி பயின்று கொண்டிருக்கிறார்.

மேலும் எமது பிரதேசத்தை சேர்ந்த மிகவும் நீண்ட காலமாக தவ்வத் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற அல்ஹாஜ் இஸ்மாயில் அவர்களின் பேத்தியும் ஆவார்.

மேலும் எமது பிரதேசத்தை சேர்ந்த ஆலிம்களான ரிஸ்வி மௌலவி , ரிபாய் மௌலவி, ரிலா மௌலவி, ரிகாஸ் மௌலவி ஆகியோரின் சகோதரியின் புதல்வியும் ஆவார்.

இன்ஷா அல்லாஹ் எதிர் காலத்தில் அல் குர்ஆன் மற்றும் மார்க்க விடயங்களில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி எதிர் காலத்தில் சிறந்த அல் ஆலிமாவாக உருவாகி எமது பிரதேசத்துக்கு சேவையாற்ற எமது பிரதேசம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

-பிரதேசவாசிகள் சார்பான முகப்புத்தக பதிவு

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.