இந்தோனேசியாவை சேர்ந்தவர்களால் நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டதில் காயமடைந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்பபடை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்துள்ளது.
இலங்கையின் தென்பகுதி கடலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காப்பாற்றப்பட்டவரை காலிதுறைமுகத்திற்கு கொண்டுவந்த கடற்படையினர் பின்னர் அவரை கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளான நபர் கடும் எரிகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார், அந்த பகுதியில் காணப்பட்ட கப்பல் அவரை காப்பாற்றி இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளது.
தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தவர் திருகோணமiலைய சேர்ந்த 33 வயதான மீனவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.