2022 ஆம் ஆண்டு உயர்தர பொறியியல் தொழில்நுட்ப பாடத்திற்கான நடைமுறைப் பரீட்சைகள் இன்று (12) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 42 நிலையங்களில் குறித்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 20,084 பரீட்சார்த்திகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் பரீட்சார்த்திகளுக்கு நடைமுறைப் பரீட்சைகள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சார்த்திகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறைப் பரீட்சை மதிப்பீட்டு நிலையத்திற்குச் செல்லுமாறு பிரதி பரீட்சை ஆணையாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.