மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க இருந்த இளம் கர்ப்பிணி மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க இருந்த இளம் கர்ப்பிணி மரணம்!


கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார்.


இது தொடர்பில் அவரது கணவர் அமில சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது,


குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.


30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் இறுதிச் சடங்குகள் நேற்று மாலை இடம்பெற்றன.


இந்த சம்பவம் தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,


கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை பொறுப்பல்ல. உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன.


இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.


எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக உழைத்தனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.