
அதன் பிரகாரம், ஏனைய மருந்துகளுடன் ஒப்பிடும் போது, இதன் விநியோகம் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி ஷாக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் பாடசாலையில் பரவவில்லை என்பது மாதிரிகள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், கடந்த 6 மாதங்களில் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியதற்காக பாடசாலை வயதுடைய எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளில் புகையிலையை பாவிக்கும் போக்கு காணப்படுவதாக ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேசிய சபையின் தலைவர் சட்டத்தரணி ஷாக்ய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.