வீடுகளை நிர்மாணித்து தருவதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடன் வசதிகள் மற்றும் நிர்மாண சேவைகள் மூலம் தமக்கு வீடு வழங்குவதாக கூறி 1 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் ஏமாற்றியதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரைரை பற்றிய தகவல் அறிந்தவர்கள் நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 071-8591641 என்ற எண் மூலமும் மிரிஹன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 011-22852556 அல்லது 071-8137373 என்ற எண் மூலமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். (யாழ் நியூஸ்)