முச்சக்கர வண்டிகளில் சுற்றுலா சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று ஒற்றை காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் உள்ள தேசிய பூங்காவிற்கு முச்சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போது வீதியின் ஓரத்தில் யானையை எதிர்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் பகிரப்பட்ட வீடியோ காட்சி சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை குறித்த யானைக்கு அருகாமையில் நிறுத்தியதைக் காட்டுகிறது.
அப்போது, யானை அவர்களை நோக்கிச் சென்று, அவர்களின் இரு முச்சக்கர வண்டிகளையும் கவிழ்த்துவிட்டு, மேலுமொரு நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை மிதித்துள்ளது.
சம்பவத்தின் போது முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.