மாணவர்களுக்கு பரீட்சையில் உதவி செய்த ஆசிரியர் பணி நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாணவர்களுக்கு பரீட்சையில் உதவி செய்த ஆசிரியர் பணி நீக்கம்!


தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கினார் என்றக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில் இருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார் என்று வடமத்திய மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் (பரீட்சை) எஸ்.ஆர் பரியங்கர தெரிவித்தார்.


இந்த ஆசிரியர் அந்தப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.


அவர், தன்னுடைய தனியார் வகுப்புகளுக்கு வருகைதந்த மாணவர்களுக்கே விடையளிப்பத்றகு இவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினார் என ஏனைய ​மாணவர்களின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவ்வாசிரியர் கடமையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.