உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றல்; இலங்கை இராணுவம் கின்னஸ் சாதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றல்; இலங்கை இராணுவம் கின்னஸ் சாதனை!


உலகின் மிகப்பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை பாரிய சத்திர சிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.


2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.


கொழும்பு இராணுவ மருத்துவமனையில் ஜூன் முதலாம் திகதியன்று இராணுவ மருத்துவர்களால் அகற்றப்பட்ட சிறுநீரக்கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டது.


தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிறுநீரகக் கல் 13 சென்றிமீற்றர், 2004 இல் இந்தியாவிலும், அதிக நிறையான 620 கிராம் சிறுநீரகக்கல் 2008 இல் பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டன.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.