அம்பாறை மாவட்ட மாட்டிறைச்சி சாப்பிடுவது சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அம்பாறை மாவட்ட மாட்டிறைச்சி சாப்பிடுவது சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரி!


மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள் எந்த பீதியும் அடையத் தேவையில்லை என நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம் றயீஸ் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள  மாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோய் மற்றும் இறைச்சி பாவினை சம்பந்தமாகவும் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,


மாடுகள் அறுக்கின்ற போது  பிரதேச சபை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உள்ளிட்ட மூன்று நிறுவனங்களும் அக்கறையுடன் செயற்படுவதனால்  மாட்டு இறைச்சியினை சாப்பிடுவது சம்பந்தமாக பொதுமக்கள்  எந்த பீதியும் அடைய தேவையில்லை.


இதேவேளை உத்தியோகபூர்வமற்ற ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் அவைகள் ஏனைய நாடுகளில் பிரதேசங்களில் நடந்தவற்றை திரிவுபடுத்தி  வருகின்றன. ஆனால் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுக்கப்படுகின்ற மாட்டு இறைச்சியை நுகர்வதனால் எவ்வித நோய்களும் ஏற்பட போவதில்லை.


மாடுகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோயினை மையமாக கொண்டு பொதுமக்கள்  பீதி அடைந்துள்ளனர்.நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்விடயத்தை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக விலங்கறுமனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கால்நடை வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றது .


அதுமாத்திரமன்றி நிந்நவூர் பகுதியில் உள்ள வளர்ப்பு மாடுகள் கூட எவ்வாறான நிலைமைகளில் உள்ளது என்பதை கண்டறிவதற்கும் ஆராயப்படுகின்றது. இவ்வாறான மாடுகளில் நோய் நிலைமையில் உள்ள மாடுகள் இனங்காணப்பட்டிருக்கின்றது. அவ்வாறு இனங்காணப்பட்ட மாடுகள் வேறாக்கி அவற்றை அறுக்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் கண்காணித்து கொண்டு இருக்கின்றோம். அத்துடன் விலங்கறுமனைகள் கூட பிரதேச சபையின் பங்களிப்புடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.அது முறையாக பராமரிக்க படுகின்றது.


அதேபோன்று எமது பொது சுகாதார பரிசோதகர்கள் நாளாந்தம் மாடுகள் அறுக்கபடுவதற்கு முன்னர் அங்கு சென்று கண்காணிக்கின்றார்கள். அது மாத்திரமன்றி அன்றைய நாள் அறுபட தயாராக இருக்கின்ற மாடுகள் முறையாக பரிசோதனைக்கு உட்படுத்தபடுகின்றது. 


இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாடுகள்  உட்பட  இறைச்சிக்கடை உரிமையாளர் ஆகியொரை பரிசோதனை மேற்கொண்ட பொதுச்சுகாதார பரிசோதகர் புகைப்படம் எடுத்து  சுகாதார வைத்திய அதிகாரியாகிய எனக்கும் நிறுவன தொலைபேசிக்கும் அனுப்பி வைக்கின்றார். இவ்வாறான கடும் நிபந்தனைக்கு பின்னர் தான் இந்த மாடு அறுக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. 


மேலும் மாடு அறுக்கப்பட்ட பின்னரும்  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் உத்தியோகபூர்வ முத்திரையை மாட்டின் ஒரு பகுதியில்  பதிவு செய்கின்றோம்.


அது மாத்திரமன்றி நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள சகல இறைச்சி கடைகளுக்கும் நாமும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் கள விஜயம் செய்து ஆராய்கின்றோம். இந்த ஆராய்வின் போது எமது முத்திரை பொறிக்கப்படாமல் விற்பனை செய்யப்படுகின்ற இறைச்சிகளை மனித நுகர்விற்கு பொருத்தமற்றது என கூறி அந்த இடத்தில் அழிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.


இச்செயற்பாடு நாளாந்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. விலங்கறுமனையில் மாடுகள் அறுக்கப்படாமல் தனியார் வளவு வெளி இடங்களில் அறுக்கப்பட்டு இறைச்சி கடைகளில் விற்பனை  செய்யப்படுமாயின் அந்த இறைச்சியில் எமது முத்திரை பொறிக்கப்பட்டிருக்காது.


அவ்வாறான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறான இறைச்சிகளை விற்பதற்கு அனுமதி நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்.


இந்த விடயத்தில் பொதுமக்களாகிய நீங்கள் பீதி அடைய வேண்டிய ஒரு காரணமும்  கிடையாது.ஏனெனில் இது ஒரு வைரஸ் நோய். இந்நோய் எல்லா மாடுகளுக்கும் பரவுவதில்லை. குறிப்பிட்ட மாடுகளுக்கு தான் பரவி இரக்கின்றது. அந்த குறிப்பிட்ட மாடுகளை வேறாக்கி வைத்துள்ளோம். அவற்றை நாளாந்தம் உன்னிப்பாக பார்வையிடுகின்றோம். அந்த மாடுகள் அறுக்கப்படும் எந்த ஒரு வாய்ப்பினையும் நாம் விட்டு வைக்கவில்லை. அந்த மாடுகள் வேறாக வைத்து கண்காணிக்கப்படுகின்றது. அந்த வகையில் நோய்கள் அற்ற மாடுகளே அறுக்கப்படுகின்றது.


அதுவும் விலங்கறுமனையில் மாத்திரம் தான் மாடுகள் யாவும் அறுக்கப்படுகின்றது. விலங்கறுமனைக்கு வெளியில் மாடுகளை அறுப்பதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சட்டவிரோதமாக மாடுகள் அறுக்கப்படுமிடத்து பொதுமக்களாகிய நீங்கள் எமக்கு தெரியப்படுத்துங்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு உரிய அதிகாரிகள் வருகை தந்து சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதி அளிக்கின்றேன். பொதுமக்களாகிய நீங்கள் இறைச்சி சாப்பிட அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டார்.


இவ்விசேட செய்தியாளர் சந்திப்பில் நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் திலகா பரமேஸ்வரன், நிந்தவூர்  பிரதேச அரச கால்நடை வைத்திய அதிகாரி கதீஸ்வரன்,  நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுச்சுகாதார பரிசோதகர்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


பாறுக் ஷிஹான்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.