போட்டித் தொடரை வென்றது இலங்கை அணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போட்டித் தொடரை வென்றது இலங்கை அணி!


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் தொடரை வென்றது இலங்கை அணி 09 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.


நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.


இதனையடுத்து, பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது.


துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பெத்தும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 56 ஓட்டங்களையும் பெற்றனர்.


இந்த போட்டியில் சிறப்பாட்டக்காரராக வனிந்து ஹசரங்கவும், தொடரின் சிறந்த வீரராக துஷ்மந்த சாமீரவும் தெரிவாகினர்.


இந்நிலையில், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை, இலங்கை அணி 2 -1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.