யுவதியொருவரின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் மீது வீடு சுற்றி தாக்குதல்; பொலிஸார் மீதும் தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யுவதியொருவரின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நபர் மீது வீடு சுற்றி தாக்குதல்; பொலிஸார் மீதும் தாக்குதல்!


யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் இளைஞனின் வீட்டை சுமார் ஐநூறு பேர் கொண்ட குழு சோதனையிட்டபோது, ​​பொலிஸார் வானத்தில் சுட்டு மிகவும் பிரயத்தனப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.


யாழ்ப்பாணம் அச்சுவேலி பிர​தேசத்திலே​யே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


யுவதியின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி உள்ளூர்வாசிகள் சிலரால் தாக்கப்பட்ட இளைஞனும் மீட்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.


அவ்விளைஞன் பொலிஸ் பாதுகாப்பில் யாழ் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.


நிலைமையைக் கட்டுப்படுத்தச் சென்றபோது, ​​வன்முறையாக நடந்துகொண்ட நபரின் தாக்குதலால் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தெற்கு நீர்வேலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது சுமார் 500 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்துவதாக பொலிஸ் 119 அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரவு நடமாடும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு நிலைமையைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ளனர்.


ஆனால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால், மற்றொரு சிறப்பு பொலிஸ் குழு அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.