உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் தொடரின், இன்றைய போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய ஓமான் அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில், அதிகபடியாக அயன் கான் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 99 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 15 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.
அணிசார்பில், அதிகபடியாக திமுத் கருணாரத்ன 61 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.