உடலுறவு விளையாட்டு; சாம்பியன்ஷிப் போட்டிக்கு அங்கீகாரம் அளித்துள்ள நாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடலுறவு விளையாட்டு; சாம்பியன்ஷிப் போட்டிக்கு அங்கீகாரம் அளித்துள்ள நாடு!


ஸ்வீடன் நாட்டில் உடலுறவு ஒரு விளையாட்டு என்று அங்கீகாரம் அளித்து "செக்ஸ் சாம்பியன்ஷிப்" போட்டி ஜூன் 08ஆம் திகதி முதல் நடத்த தீர்மானித்துள்ளது..


உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விஷயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது ஸ்வீடன்.


அதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிட்டுள்ள ஸ்வீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.


இந்தப் போட்டி வருகிற 08ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது. 


இந்தப் போட்டியை நடத்த ஸ்வீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவிகிதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவிகிதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள்.


இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 


ஸ்வீடனின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


இந்திய ஊடகம்


UPDATE: 

https://www.yazhnews.com/2023/06/blog-post_84.html


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.