சர்வதேச Abacus போட்டியில் மாவனல்லை மாணவன் இரண்டாம் இடம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச Abacus போட்டியில் மாவனல்லை மாணவன் இரண்டாம் இடம்!!இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் போட்டியில் மாவனல்லையை சேர்ந்த மாணவன் எம்.ஐ. ஸzய்த் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் செயற்படும் ஐகேம் அபாகஸ் (ICAM Abacus) நிறுவனத்தின் 7ஆவது தேசிய அபாகஸ் போட்டியில் சித்தியடைந்த 44 மாணவர்கள் மேற்படி சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் பங்குபற்றியிருந்தனர்.

இதில் மாவனெல்லையைச் சேர்ந்த Kandy Royal International School இல் கல்வி கற்கும் M.I.ZAIDH சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று எமது தாய்த் திரு நாட்டிக்கும், கல்வி நிலையத்திற்கும், பயிற்றுவித்த ஆசிரியைக்கும், கல்வி பயிலும் பாடசாலைக்கும் மற்றும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேபோல் இனிவரும் காலங்களிலும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.