ஹபராதுவ பௌத்த விகாரை ஒன்றில் உக்ரேனிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உனவட்டுன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், கடந்த புதன்கிழமை (21) குறித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும் லங்காதீப தெரிவித்துள்ளது .
உனவடுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணி ஹபராதுவ பௌத்த விகாரைக்கு வழமையாக செல்வதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் போதி மரத்தை வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணை அணுகி விகாரையின் மற்றுமொரு பகுதியில் வழிபடுமாறு அழைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் அழைப்பின் பேரில் குறித்த பகுதிக்கு சென்ற பெண் அங்கிருந்து வெளியேறும் போது அவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். (யாழ் நியூஸ்)