புதிய மாணவர்களை பகிடிவதை செய்த 11 பேருக்கு பல்கலைக்கழக தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய மாணவர்களை பகிடிவதை செய்த 11 பேருக்கு பல்கலைக்கழக தடை!


பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் புதிய மாணவர் குழுவை துன்புறுத்தி, பகிடி வதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.


முகாமைத்துவ பீடத்துக்கு புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த மாணவர்களை பகிடி வதைக்கு உட்படுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், 11 மாணவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்காலிகமாக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.