VIDEO: நடுவானில் திறக்கப்பட்ட விமானத்தின் கதவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நடுவானில் திறக்கப்பட்ட விமானத்தின் கதவு!

தென்கொரியாவின் டேகு நகரில் ஆசியானா விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு முன்னரே பயணி ஒருவர் அதன் அவசர கதவைத் திறந்துவிட்டார். அதையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்த ஏர்பஸ் ஏ321 ரக விமானம், ஜேஜு தீவிலிருந்து புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.40 மணிக்கு டேகு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், ஒன்பது பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக டேகு தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் 8 பேர், ஜேஜுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் என்று அத்தீவின் கல்வி அலுவலகம் கூறியது.

அவசர கதவு உள்ள வரிசைக்கு அருகில் இருந்த பயணி ஒருவரை அதிகாரிகள் விசாரித்ததாக ஆசியானா அதிகாரிகள் கூறினர்.

“அவசர கதவுக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அதன் கைப்பிடியைத் தொட்டார். காவல்துறையினர் இச்சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்”, என்று அதிகாரிகளில் ஒருவர் சொன்னார்.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.